வேலைவாய்ப்பு

ரூ.40,000/- ஊதியத்தில் தேர்வில்லாத தமிழக அரசு வேலைவாய்ப்பு!!

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் IT Coordinator & Quality Consultant ஆகிய பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்ப தகுதிகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு பதிவு செய்திடுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் – TN Govt
பணியின் பெயர் – IT Coordinator & Quality Consultant
பணியிடங்கள் – 02
கடைசி தேதி – 23.08.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்

பணியிடங்கள்:

தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் IT Coordinator & Quality Consultant பணிகளுக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

  • IT Coordinator – MCA/ BE /B.Tech தேர்ச்சியுடன் பணியில் ஒரு வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • District Quality Consultant – Hospital Administration/ Public Health/ Health Management பாடங்களில் PG டிகிரி தேர்ச்சியுடன் பணியில் 2 வருடங்கள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்

ஊதிய விவரம் :

மாத ஊதியமாக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,500/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview முறையின் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி உள்ளவர்கள் வரும் 23.08.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ரூ.15,000/- சம்பளத்தில் அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு!!
Back to top button
error: