வேலைவாய்ப்பு

ரூ.23,000/- ஊதியத்தில் வனத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!

இந்திய வனவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ICFRE) நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Senior Project Fellow, Junior Project Fellow, Field Assistant, Project Assistant பணிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவில் அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மத்திய அரசு பணியிடங்கள் :

ICFRE நிறுவனத்தில் Senior Project Fellow, Junior Project Fellow, Field Assistant, Project Assistant பணிகளுக்கு என 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

SPF வயது வரம்பு :

01.07.2021 தேதியில் அதிகபட்சம் 28-32 வயது வரை உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Bachelor’s degree/ Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சம் ரூ.23,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் Interview மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் ஆனது வரும் 28.07.2021, 29.07.2021 & 30.07.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 28.07.2021, 29.07.2021 & 30.07.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: