தமிழ்நாடுமாவட்டம்

கடலுக்குள் “டும்டும்”.. அசத்திய சென்னை ஜோடி..

திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் சின்னதுரையும், கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் ஸ்வேதாவும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்களில் வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் செய்ய இருவீட்டினரும் முடிவு செய்தனர். தன்னுடைய திருமணத்தை வித்தியாசமாக ஆழ்கடலுக்குள் நடத்த நினைத்த சின்னத்துரை தனது ஆசையை மணமகள் வீட்டாரிடம் கூறினார். அதற்கு மணமகளும், அவரது வீட்டாரும் சம்மதித்தனர். ஏற்கனவே சின்னத்துரை ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்றவர் என்பதால் மணப்பெண்ணுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் அவர் தோ்வுற்றதை தொடர்ந்த இன்று காலை சென்னை நீலாங்கரை கடற்கரையில் இருந்து வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதிக்கு மணமக்கள் படகு மூலம் அழைத்து செல்லப்பட்டனர். கரையில் இருந்து 5 கிலோ மீட்டர் துாரத்திற்கு இரண்டு படகுகளில் 12 பேருடன்

628123

vikatan 2021 02 b2948f6e 7d7b 496e 882a 87470f03847b 3b36d790 2ad9 4ff3 8482 d20ca13a7cff

vikatan 2021 02 3a3d37b3 4dfd 47a8 b521 76ea5c87925d         4

vikatan 2021 02 4b82ccec a95e 4c45 bf44 5d709f32add5         3

vikatan 2021 02 5e752b83 2f60 4136 ba62 66eb9c73f8da         2

screenshot6354 1612184656

சென்ற மணமக்கள், தேவையான ஆழ்கடல் உடைகளை அணிந்து கடலுக்குள் குதித்தனர். அவர்களுக்கு உதவியாக 9 பேர் ஆழ்கடலுக்குள் சென்றனர். மலர்கள் மற்றும் செடிகளால் மணவறை ஏற்பாடு செய்யப்பட்டது. அது மிதந்து மேலே வராமல் இருப்பதற்காக அலுமினிய குண்டுகள் அதில் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆழ்கடலில் மணமகன் சின்னத்துரை, மணமகள் ஸ்வேதாவின் கழுத்தில் தாலி கட்டினார். இந்த திருமணம் 40 நிமிடம் நடைபெற்றது.

Back to top button
error: Content is protected !!