இந்தியா

புதுவை பல்கலை சமுதாய கல்லூரி மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் தொடக்க்கம்!!

புதுவை பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் மாணவர் சேர்க்கை இணையவழி மூலம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இதற்கு ஆர்வமுள்ள மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் பாடங்கள், தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டதை தற்போது தொடர்ந்து மாணவர்கள் கல்லூரியில் விண்ணப்பித்து வருகின்றனர். பல்வேறு கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வரும் நிலையில் தற்போது புதுவை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இணையவழி மூலம் 26ம் தேதி முதல் நடக்கவிருக்கிறது.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு தன்னாட்சி கல்லூரியாக புதுவை பல்கலைக்கழக சமுதாயக் கல்லூரி இயங்கி வருகிறது. அதில் இளங்கலைப் படிப்புகளும் கணினி பயன்பாடுகள், வணிக நிர்வாகம், உயிர் வேதியியல், ஊடகவியல், வணிகவியல் ஆகிய படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இளங்கலை மருத்துவ தொழில்நுட்ப படிப்புகளில் இதய பரிசோதனை தொழில்நுட்பம், அறுவை சிகிச்சை கூடத் தொழில்நுட்பம், சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பம், கதிர்வீச்சு மற்றும் நிழற்படத் தொழில்நுட்பம், கண் பார்வை சம்பந்தமான மருத்துவ தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் சேவை தொழில்நுட்பம், கணினி மென்பொருள் மேம்பாட்டு தொழில்நுட்பம் ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன.

மேலும் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், சுகாதார ஆய்வாளர், பத்திர எழுத்தர், யோகா, நாடகம் மற்றும் அரங்கக் கலைகள், கர்நாடக இசை (பாட்டு), பரதநாட்டிய கலை ஆகிய படிப்புகள் உள்ளது. இது போன்ற பாடப்பிரிவுகளில் சேருவதற்கான விண்ணப்பங்களை இணைய வழியாக அனுப்பலாம். மாணவர்கள் http://pucc.edu.in/ என்ற இணைய முகவரியை பயன்படுத்தி ஆகஸ்ட் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: