சிறியா நங்கை கடுமையான கசப்புத்தன்மை கொண்டிருக்கும் இதை தொட்டாலே நீண்ட நேரம் கசப்புதன்மை உள்ளங்கையில் இருக்கும். அதன் பிறகு எதை சாப்பிட்டாலும் அதில் கசப்புதன்மை ஏறியிருக்கும் அவ்வளவு கசப்புதன்மை கொண்ட மூலிகை இது.
இதன் கசப்புதன்மைக்கு காரணம் இலைகளில் பீட்டா சட்டோஸ்டீரால், கால்மேகின் என்னும் பொருளும், வேர்களில் ஆண்டி ரோகிராப்பின் என்னும் கசப்பு பொருளும் இருப்பதால் தான். சிறியா நங்கை மிள்காய் நங்கை, குருந்து என்றும் கிராமங்களில் அழைக்கப்படுகிறது.
சிறியா இலையை அரைத்து ஒரு கொட்டைப் பாக்களவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் உட் கொள்ள உடல் வலுக்கும். இதன் இலையை உலர்த்திப் பொடித்து அதே அளவு சர்க்கரை கூட்டி காலை, மாலை இரு வேளையும் 2 முதல் 4 கிராம் வரை உட்கொண்டு வர உடல் வலுக்கும், அழகு பெரும். பாம்பு கடிக்கு இதன் இலையைக் கசப்புச் சுவை தோன்றும் வரை தின்னும்படி கொடுத்து வர கடி நஞ்சு நீங்கும்.
ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகவே இருக்கு என்று இன்சுலினையும், மாத்திரையும் கலந்து எடுத்துகொள்பவர்களுக்கும் இவை அருமருந்து தான். காலை உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாகவோ அல்லது வெறூம் வயிற்றில் அதிகாலையில் இதன் ஒரு இலையை மென்று விழுங்க வேண்டும். கசப்பு மருந்து சிரமம் கொடுத்தாலும் பலன் மிகுதியாக இருக்கும். அதோடு இன்சுலின் போடுவதும் படிப்படியாக குறையும் அளவுக்கு இன்சுலின் சுரப்பும் உண்டாகும்.
சிறியா நங்கை இலைப் பொடி, நெல்லி முள்ளிப் பொடி, நாவல்கொட்டைப் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி இவை ஐந்து வகைகளையும் ஒரே எடை அளவு சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை காலை, மாலை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு தம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறைந்து கட்டுக்குள் வரும்.