தேவையான பொருட்கள் :
- ஆட்டுக்கறித் துண்டுகள் – 500 கிராம்
- பெரிய வெங்காயம் – 2
- சின்ன வெங்காயம் – 10
- இஞ்சி—பூண்டு அரைத்தது – 3 தேக்கரண்டி
- தயிர் – 2 மேஜைக்ககரண்டி
- பிரியாணி இலை – 1 துண்டு
- பட்டை – 2 துண்டு
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- தக்காளி ஸாஸ் (Tomato Sauce) – 1 தேக்கரண்டி
- தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
- கரம்மஸாலாத்தூள் – அரை தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 200 மில்லி லிட்டர்
செய்முறை :
ஆட்டுக்கறித் துண்டுகள், தண்ணீர், மஞ்சள்தூள், சின்ன வெங்காயம், 1 தேக்கரண்டி இஞ்சி—பூண்டு அரைத்தது, உப்பு இவற்றைக் கலந்து, வேக வைத்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம் போட்டு மிகவும் சிவக்க, (Brown Color) வறுத்து எடுத்து, ஆற விடவும்.
ஆறியதும் தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் 3 மேஜைக்ககரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு தாளித்து இஞ்சி—பூண்டு அரைத்தது போட்டு வதக்கவும்.
அதன்பின் அரைத்து வைத்துள்ள வெங்காயக்கலவை போட்டு மிதமான தீயில் வைத்து வதக்கவும்.
வதக்கியபின் தனியாத்தூள், மிளகாய்த்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், தக்காளி ஸாஸ், கரம்மஸாலாத்தூள் இவற்றைப் போட்டு மேலும் நன்றாக வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் வேக வைத்துள்ள கறித் துண்டுகளை, கறி வேக வைத்த தண்ணீரோடு சேர்த்து கிளறவும்.
உப்பு சரி பார்த்துக் கொள்ளவும்.
5 நிமிடங்கள் ஆனபின் இறக்கி பரிமாறலாம்.
Leave a Comment