26.1 C
Chennai

ஆலம்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றித் தெரியுமா?

- Advertisement -

ஆல் அல்லது ஆலமரம் (Ficus benghalensis) விழுதுகளை உடைய ஒரு மரம் ஆகும். இதன் விதைகள் பழம் உண்ணும் பறவைகளால் பரப்பப்படுகின்றன.

மரங்களில் மிகவும் அகலமான மரம் ஆலமரம். ‘அகல்’ என்னும் சொல் ‘ஆல்’ என மருவியதால் இம்மரம் ‘ஆலமரம்’ எனப் பெயர் பெற்றது. ஆலமரத்தின் இலை முதல் வேர் வரை மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. அவை பற்றியே விரிவாக இந்த பதிவின் வாயிலாக நாம் பார்க்க இருக்கிறோம்.

- Advertisement -

சின்னஞ்சிறிய ஆலம்பழத்தில் மனிதர்களின் மலட்டுத்தன்மையை நீக்கக் கூடிய சக்தி உள்ளது என்பது அதிசயிக்கத்தக்க உண்மையாகும். சிவந்த நிறமுடைய ஆலம் பழத்தில் ஆயிரக்கணக்கான சின்னஞ்சிறிய விதைகள் காணப்படுகின்றன. இந்த விதைகள் கூடப் பல விதங்களில் மருத்துவ குணம் கொண்டது தான். எனினும், முதலில் ஆலம் பழத்தின் மருத்துவ குணங்கள் குறித்து முதலில் பார்ப்போம் வாருங்கள்.

ஆலம்பழத்தை பொடி செய்து நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். ஆலம் பழம் சருமப் பாதுகாப்பிற்கு உகந்தது! சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் கூட இது பயன்படுத்தப்படுகிறது.

- Advertisement -

ஆண்கள், பெண்களின் மலட்டுத்தன்மையை நீங்க ஆலம்பழம் பயன்படுகிறது. இதற்கு, மரத்தில் கனிந்துள்ள பழங்களை பறித்து அதில் பூச்சிகளை நீக்கிவிட்டு நிழலில் உலர வைக்க வேண்டும். பின்னர் அவற்றை நன்றாக இடித்துப் பொடி செய்து காற்றுப் புகாத பாத்திரத்தில் அந்தப் பொடியை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் காலை, மாலை இரண்டு வேலை பசும்பாலை காய்ச்சி அதில் இந்த பொடியை ஒரு கரண்டி போட்டு கலந்து குடிக்க வேண்டும். இப்படியாக, நாற்பத்தி எட்டு நாட்கள் இந்தப் பொடியை குடித்து வர மலடு நீங்கி குழந்தை பிறக்கும்.

- Advertisement -

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொருத்து தினசரி ஒரு ஸ்பூன் பாலில் கலந்து அருந்தலாம். இது நல்ல பலன் தர வல்லது. ஆலம் பழம் தசைவலிகளை நீக்கும் தன்மை கொண்டது.

இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளைக் கூட சரி செய்யும். பல் வலிக்கும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் பல்வலி போகும். இப்படியாக இம்மூலிகை ஏராளமான மருத்துவப் பயன்களை கொண்டுள்ளது.

- Advertisement -

Read More

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

forty five − = thirty five

error: