தமிழ்நாடுமாவட்டம்

2வது நாளாக நாகையில் பிரசாரம்.. இன்றும் உதயநிதி, நேரு கைது..

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை திமுக துவக்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி நேற்றைய தினம் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்” என்கிற பிரச்சார பயணத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் துவக்கினார். கடைவீதியில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி கைது செய்யப்பட்டார். பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் இன்று நாகை துறைமுகத்தில் உதயநிதி 2ம் நாள் பிரச்சாரத்தை துவக்கினார். படகு மூலம் கடலுக்குள் சென்ற உதயநிதி, திமுக முதன்மைச் செயலாளர் நேரு ஆகியோர் கடற்கரைக்கு வந்து பிரச்சாரத்தை துவக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர். 2வது நாளாக பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து திமுகவினர் ஆர்பாட்டம் மேற்கொண்டனர்.

loading...
Back to top button
error: Content is protected !!