தமிழ்நாடுமாவட்டம்

உதயநிதி ஸ்டாலின் கைது!

நாகை துறைமுகத்தில் வைத்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற முழக்கத்துடன் 75 நாட்கள், 15 தலைவர்கள் 234 தொகுதிகள் 1500க்கும் மேற்பட்ட கூட்டங்கள் 15,000 கி.மீ பயணம் என்று தேர்தல் பிரசார பயணத்தை திமுக அறிவித்துள்ளது.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பிரச்சார பயணத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சார பயணத்தை நேற்று தொடங்கினார்.

நேற்று உதயநிதியை கைது செய்த போலீசார், பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில், இன்று நாகையில் படகில் ஏறி பிரசாரம் மேற்கொண்டு திரும்பிய போது நாகை துறைமுகத்தில் வைத்து உதயநிதி ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர்.

கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

loading...
Back to top button
error: Content is protected !!