மாவட்டம்தமிழ்நாடு

திருச்சியில் உதயநிதி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு..

திருச்சியில் தி.மு.க பிரமுகர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் நேற்று திருச்சி வந்தார். இன்று காலை மேல சிந்தாமணி பகுதியில் திருச்சி தி.மு.க தெற்கு மாவட்டம் சார்பில் அவருக்கு கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.பெண்கள் மலர் தூவி அவரை வரவேற்றனர்.தொடர்ந்து அப்பகுதியில் தி.மு.க வின் கொடியை ஏற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார். அதன் பின்பு கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற தெற்கு மாவட்ட நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

6e87ec14 3711 45a6 9373 f614cc7a5a5c

uthaya02

அதன் பின்னர் மணப்பாறையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றார். அவருடன் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், சட்ட மன்ற உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழி மற்றும் இளைஞரணியினர் உடனிருந்தனர். திருச்சியில் நிகழ்ச்சிகளை முடித்த பின்பு திருக்குவளை செல்லும் உதயநிதி அங்கு தேர்தல் பிரச்சாரத்தை இன்று தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

loading...
Back to top button
error: Content is protected !!