சினிமா

‘புஷ்பா’ படத்திற்கு U/A சான்றிதழ்!

டைரக்டர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள படம் புஷ்பா. இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

டிஎஸ்பி இசையமைத்துள்ள இந்த படத்தில் சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், ஃபகத் ஃபாசில், தனஞ்செயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாஸ் ஆக்ஷன் பொழுதுபோக்கு படமான புஷ்பா படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றை சந்திரபோஸ் எழுதி உள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படம் வரும் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: