தமிழ்நாடுமாவட்டம்

புலிக்கு இறைச்சியில் விஷம் கலந்து கொடுத்து கொன்ற 2 பேர் கைது..!

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இறைச்சியில் விஷம் கலந்து கொடுத்துப் புலியைக் கொலை செய்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிங்காரா வனக் கோட்டத்தில் சீமார்குழி ஓடைப் பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, புலியின் சடலத்தைப் பார்த்துள்ளனர். சுமார் 7 வயதான இந்தப் பெண் புலியின் நகங்கள் மற்றும் பற்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன.

இந்நிலையில், இறந்த புலி அருகில் இருந்த அதன் 2 குட்டிகளை வனத்துறையினர் மீட்டு, சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பினர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், மேய்ச்சலின்போது கால்நடைகளைப் புலி கொன்றுவிடும் என்ற அச்சத்தில், இறைச்சியில் விஷம் கலந்துவைத்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து மசினகுடி ஆச்சக்கரையைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளியான அகமது கபீர் (26), அதே பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மசினகுடி ஆச்சக்கரையைச் சேர்ந்த சதாம் (29) மற்றும் செளகத் அலி (55) ஆகியோரை வனத்துறையினர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். கைதான அகமது சபீர் மற்றும் கரியன் ஆகியோர் கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:  தேங்காய் பால் அருந்துவதால் இவ்வளவு நன்மைகளா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: