தமிழ்நாடுமாவட்டம்

திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் – தேர்வுத்துறை

10, 12ஆம் வகுப்பு மாநில அளவிலான திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் என தேர்வுத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வுகள் வரும் 20ஆம் தேதி முதல் இருபத்தி எட்டாம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் வரும் 19ம் தேதி முதல், 27 ஆம் தேதி வரையும் நடைபெற உள்ளன.

இந்த மாதம் இறுதிவரை கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், திருப்புதல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல்முறையாக திருப்புதல் தேர்வு கேள்வித்தாள்களை தேர்வுத்துறை அச்சிட்டு, மாநில அளவிலான தேர்வாக நடைபெற உள்ளது. அதே சமயம், மே மாதத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால்,  திருப்புதல் தேர்வு மதிப்பீடாக எடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு கண்காணிப்பு – சிறப்பு அதிகாரிகள் நியமனம்!!
Back to top button
error: