தமிழ்நாடுமாவட்டம்

திருச்சியில் டியூசன் டீச்சர் தற்கொலை..

திருச்சி அருகே உள்ள குண்டூர் பர்மா காலனி பகுதியில் வசித்து வருபவர் குப்பு சாமி இவரது மகன் சசிகுமார் (30). பட்டதாரியான இவர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். திருமணம் ஆகவில்லை. தற்போது அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அறையின் உத்திரத்தில் தூக்குப் மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீசார் தற்கொலை செய்து கொண்ட சசிகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .

Back to top button
error: Content is protected !!