ஆரோக்கியம்

சுவாச வியாதியை குணப்படுத்தும் தண்ணீர் விட்டான் கிழங்கு!

தண்ணீர் விட்டான் கிழங்கு ‘சதாவேரி’ என்றும் நீலாவரை, சதாமூலம், சதாவரை, சதாமுல்லி, சித்தவரை, ஆஸ்வாலி, சக்ராகுல் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. தண்ணீர் விட்டான் கிழங்கு இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இந்தச் செடி ஓரளவு வறட்சியை தாங்க வல்லவை. 1500 முதல் 4000 அடி உயரமுள்ள மலைப்பிரதேசங்களில் இதன் வளர்ச்சி நன்றாக இருக்கும். இந்தியா, இலங்கை, இமயமலை ஆகிய இடங்களில் காணப்படும். இவை கொடி வகையைச் சார்ந்தது. இதன் கிழங்குகள் மற்றும் வேர்கள் மிகுந்த மருத்துவ குணம் கொண்டவை. சதாவரிக் கிழங்கு பழைய சுரம், சோமரோகம், உடலின் சூடு, உடல் எடை கூடவும், சர்க்கரை நோய், சுவாச வியாதி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.

சங்க கால தமிழ் பாடலில் தண்ணீர் விட்டான் கிழங்கின் பெருமை குறித்து கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

“நீரிழிவைப் போக்கு நெடுநாட் சுரத்தையெலா

முரைவிடுத் தோட வுறுகுங்காண் நாரியரே

வெந்நீர் ரெய் சோமநோய் வேட்டை யறைற்றணிக்குந்

தண்ணீர் விட்டான் கிழங்கு தான்”

நன்மைகள்

தண்ணீர் விட்டான் கிழங்கு பால் சேர்த்து அரைத்துக் காயவைத்து பொடி செய்து, தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு குணமாகும்.

தண்ணீர் விட்டான் கிழங்குப் பொடியைப் பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம், வெட்டைச் சூடு குணமாகும்.

தண்ணீர் விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50 கிராம் எடுத்துப் பொடி செய்து, தினமும் இரண்டு வேளை இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்துச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் குணமாகும்.

தண்ணீர் விட்டான் கிழங்கு, பூனைக்காலி விதை, நெருஞ்சில், அமுக்கரா, சாலாமிசரி – தலா 100 கிராம் எடுத்துப் பொடி செய்து தினமும் பாலில் கலந்து குடித்தால் ஆண்மைக்குறைவு, நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

தண்ணீர் விட்டான் கிழங்கு உடலைப் பலமாக்கும், உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

உடல் பலம் பெற தண்ணீர் விட்டான் கிழங்கைச் சேகரித்து, நீரில் கழுவி, மேல் தோல் நீக்கி, காயவைத்து தூள் செய்து கொள்ள வேண்டும். இந்தத் தூள் இரண்டு கிராம் அளவு, பசு நெய்யில் கலந்து, தினமும் காலை, மாலை இரண்டு வேளைகள் சாப்பிட்டுவர வேண்டும்.

தண்ணீர் விட்டான் கிழங்கைக் காயவைத்து, தூள் செய்துகொண்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் இரண்டு வேளைகள், ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிட்டு, ஒரு டம்ளர் பால் குடித்து வர ஆண்மை பெருகும்.

மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த நான்கு தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றுடன், 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து தினமும் மூன்று வேளை வீதம், 5 நாட்களுக்கு பருக வேண்டும்.

கால் எரிச்சலைக் கட்டுப்படுத்த தண்ணீர் விட்டான் கிழங்கிலிருந்து சாறு எடுத்து, காலையிலும், படுக்கைக்குப் போகும் முன்பும், காலிலும், பாதத்திலும் பூச வேண்டும். குணமாகும் வரை சிகிச்சையைத் தொடரலாம்.

கருமுட்டை உற்பத்தியை பெருக்கும் சக்தி தண்ணீர் விட்டான் கிழங்குக்கு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: