ஆரோக்கியம்

மோசமான பொடுகை நிரந்தரமா விரட்டும் பூண்டு! இப்படி பயன்படுத்தி பாருங்க..!

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. இது ஒரு பொதுவான பிரச்சனை என்றாலும் அவ்வபோது வரக்கூடியது.

சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு, எரிச்சலையும் அதிகமாக உண்டாக்கும். இதனை ஒழிக்க நாம் கடைகளில் கிடைக்கும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அது தற்காலிகமாக பொடுகை நீக்குமே தவிர முழுமையான தீர்வை தராது.

பொடுகை முற்றிலும் நிறுத்த மீண்டும் பொடுகு வராமல் தடுக்க இயற்கை வைத்தியம் சிறந்தது.அதிலும் பூண்டு பொடுகை விரட்ட நல்ல தேர்வாக இருக்கும்.

அந்தவகையில் பொடுகை போக்க எப்படி பூண்டை பயன்படுத்தலாம் என பார்ப்போம்.

பூண்டு எண்ணெய் 2 டீஸ்பூன், ஆலிவ் எண்ணெய் 5 டீஸ்பூன் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி விரல்களில் தொட்டு வட்ட இயக்கத்தில் இலேசாக மசாஜ் செய்து விடவும். குறிப்பாக முடியின் மயிர்க்கால்களில் வேர்பகுதிகளில் மசாஜ் செய்த 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். வாரம் இரண்டு முறை இதை செய்து வந்தால் பொடுகு நீங்கும்.

பூண்டு எண்ணெய் 2 டீஸ்பூன் , தேங்காய் எண்ணெய் -4 டீஸ்பூன்இரண்டையும் நன்றாக கலந்து விடவும். இதை டபுள் பாய்லிங் முறையில் இலேசாக சூடேற்றவும். பிறகு வட்ட இயக்கத்தில் உச்சந்தலையை நன்றாக மசாஜ் செய்து கொள்ளவும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து தலைமுடிக்கு ஷாம்பு போட்டு அலசி எடுக்கவும்.

5 டீஸ்பூன் தயிர் மற்றும் பூண்டு 2 டீஸ்பூன் விழுது நன்றாக கலக்கவும். சிறிது இளநீர் சேர்த்து இதை தலையில் பயன்படுத்துவதற்கு முன்பு தேங்காய் எண்ணெயுடன் உச்சந்தலையில் மசாஜ் செய்து தயிர் மற்றும் பூண்டு விழுதை உச்சந்தலையில் தடவி எடுக்கவும். 20 நிமிடங்களுக்கு பிறகு தலைமுடியை அலசி எடுக்கவும். பூண்டு விழுது எரிச்சலை உண்டாக்கினாலும் தயிர் சேர்ப்பதால் அது உச்சந்தலையில் பாதிப்பை உண்டாக்காது.

2 டீஸ்பூன் பூண்டு சாறு உடன் 4 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் நன்றாக தடவி எடுக்கவும். மயிர்க்கால்களில் நன்றாக பட வேண்டும். பிறகு தலைக்கு ஷவர் கேப் அணிந்து 30 நிமிடங்கள் விட்டு விடவும். இப்போது தலைமுடியை மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். இந்த மாஸ்க் பொடுகு நீக்குவதோடு கூந்தலை பளபளப்பாக வைத்திருக்கவும் செய்யும்.

2 டீஸ்பூன் பூண்டு எண்ணெய், 1 டீஸ்பூன் தேன் மர்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து உச்சந்தலையில் இந்த பூண்டு விழுதை தடவி பேக் போட்டு ஷவர் கேப் அணிந்து 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். பிறகு மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும்.

பூண்டு பல் 8 நசுக்கி தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயில் தடவி ஒரே இரவில் ஊறவைக்கவும். காலையில் எண்ணெயை சூடேற்றி இறக்கி ஆறவிடவும். இது பொடுகு மீண்டும் தோன்றுவதையும் தடுக்கும். மயிர்க்கால்களுக்கு வலுகொடுப்பதால் பொடுகு போராட்டத்துக்கு வேண்டிய இரத்த ஓட்டம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: