தேவையான பொருட்கள்:
வெள்ளை சாதம் – 2 கப்
கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது (நறுக்கியது)
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் சாதத்தை மத்து கொண்டு நன்கு மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் எண்ணெயைத் தவிர, கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், கொத்தமல்லி, புதினா, மிளகாய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீர் தெளித்து கரண்டியால் நன்கு மசித்து கிளறி விட வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த கலவையை சிறு உருண்டை உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான அரிசி பக்கோடா தயார்.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh