ஆரோக்கியம்தமிழ்நாடு

உடற்பருமனை எளியமுறையில் குறைக்கனுமா? தினமும் இந்த உடற்பயிற்சியை 10 நிமிடங்கள் செய்து பாருங்க..!

உடல் பருமனாக இருப்பவர்கள், கீழ்க்கண்ட இந்த உடற்பயிற்சிகளை தினமும் 10 நிமிடங்கள் கால அளவிற்கு செய்துவந்தால், நல்ல பலன் பெறலாம்.

தற்போது அந்த உடற்பயிற்சினை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.

பிளட்டர் கிக்

உங்கள் உடலின் பின்பகுதியை கால்களோடு இணைத்தபின், கைகளை, பின்பகுதியுடன் சேர்த்து வைத்துக்கொண்டு மேசை விரிப்பின் மீது படுக்க வேண்டும்.

இடது காலை மெதுவாக, இடுப்புப்பகுதிக்கு மேலே உள்ளவாறு உயர்த்த வேண்டும். அதேநேரத்தில், வலது காலை, தரையில் இருந்து சில அங்குலங்கள் மட்டுமே உயர்த்த வேண்டும்.

இந்த நடைமுறையின்போது, நமது பின்பகுதி தொடர்ந்து தரையுடனேயே தொடர்பில் இருத்தல் வேண்டும்.

இதே நிலையில், 5 வினாடிகள் இருந்து, பின் காலை மாற்றி செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து காலை மாற்றி செய்வதன் மூலம், பிளட்டர் கிக் மோஷனை, நாம் கொண்டு வரலாம்.

இந்த உடற்பயிற்சி சிலருக்கு மிகவும் சவாலானதாக உள்ளது. தரையில் தொடர்பு கொண்டுள்ள தலை மற்றும் கழுத்து பகுதியை சற்றே உயர்த்த வேண்டும்.

உடற்பயிற்சியை முதலில் மெதுவாக ஆரம்பித்து,பிறகு படிப்படியாக வேகத்தை அதிகப்படுத்தவும்.

உடற்பயிற்சியின் போது, உங்கள் கால் விரல்கள் மேல்நோக்கியே இருக்க வேண்டும் மற்றும் உடல் இறுக்கமாகவே இருக்க வேண்டும். உங்களால் முடிந்த வரையிலான உயரத்திற்கு கால்களை உயர்த்த முயற்சிக்கவும்.

தினமும் 10 நிமிடங்கள் செய்துவந்தால், நமது உடலின் வயிற்றுப்பகுதியில் தங்கியுள்ள கொழுப்புகள் கரைந்து, தட்டையான வயிற்றை, ஒரு மாதத்திற்குள் பெற முடியும்.

நன்மைகள்

பிளட்டர் கிக் உடற்பயிற்சி, நமது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க செய்கிறது. இந்த வழிமுறைகளையும் நாம் தவறாது பினபற்றினால், இந்த உடற்பயிற்சியின் மூலம், நாம் அதிகப்படியான நன்மைகளை பெற முடியும்.

இது கால்களுக்கு சிறந்த உடற்பயிற்சியாக விளங்குவதோடு மட்டுமல்லாது, உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க பயன்படுகிறது.

சிறந்த தோற்றப்பொலிவை பெற உதவுவதோடு மட்டுமல்லாது, முதுகு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கவும் மற்றும் உடலின் பிளக்ஸிபிலிட்டி தன்மையை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

குறிப்பு

உடற்பயிற்சியை செய்யும்போது, நாம் அஜாக்கிரதையாக இருந்துவிட்டால், உடலில் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இதில் அதிகம். முதுகு வலி மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள், இந்த பிளட்டர் கிக் உடற்பயிற்சியை தவிர்ப்பது நல்லது.

உடற்பயிற்சியை செய்யும்போது, நடுநிலை இடுப்பு முதுகெலும்பின் நிலை மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.
உடற்பயிற்சியில், உங்கள் உடலின் மையத்தை ஈடுபடுத்துவதன் மூலமே, நாம் வயிற்றில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்பை கரைக்க முடியும்.

பிளட்டர் கிக் உடற்பயிற்சியை செய்யும்போது, உங்கள் கழுத்தை ஒருபோதும் உயர்த்தி பிடித்து விடாதீர்கள். இது பெரும்பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
உடற்பயிற்சியின் போது கால்களை நகர்த்திய பிறகே, இடுப்பு நெகிழ்வுகளை நீட்டவும்.

இதையும் படிங்க:  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதி உட்பட 45 பேருக்கு கொரோனா..!!

இந்த உடற்பயிற்சியை செய்யும்போது, மூச்சை பிடித்துக்கொள்வது உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: