உலகம்

அமெரிக்காவை விட்டு நான் வெளியேறும் நிலை வரும்: தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் உருக்கம்

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை சந்தித்தால் அமெரிக்காவை விட்டு தாம் வெளியேற வேண்டியிருக்கும் என்று குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான, டொனால்ட் டிரம்ப் தனது பிரச்சாரத்தின்போது தெரிவித்துள்ளார்.

நவம்பர் 3ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜார்ஜியா மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை இந்த தேர்தலில் தோற்றால், நான் அவ்வளவு சிறப்பாக உணர மாட்டேன். எனவே நாட்டை விட்டு வெளியேற வேண்டி வந்தாலும் வரும். எனக்கு தெரியாது என்று தெரிவித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளர் ஜோ பைடன் என குறிப்பிட்ட ஜனாதிபதி டிரம்ப்,

இவருடன் தேர்தலில் தோல்வியை சந்திப்பது என்பது உண்மையில் எனக்கு சாதாரண விவகாரம் அல்ல என தெரிவித்துள்ளார்.

ஆனால் தோல்வி பயம் காரணமாகவே ஜனாதிபதி டிரம்ப் இவ்வாறு உளறுவதாக அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Back to top button
error: Content is protected !!