மாவட்டம்

காதலி கர்ப்பம்.. திருமணம் செய்ய மறுத்த திருச்சி வாலிபர் கைது..

திருச்சி மண்ணச்சநல்லூர் மகாளி குடி பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா(20) பன்னிரண்டாம் வகுப்பு படித்திருக்க இவர் மாருதி சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கேஆர்டி மோட்டார்ஸ் சில பணிபுரிந்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த நந்தகுமார்(20) என்பவருடன் அவருக்கு காதல் இருந்து வந்தது.

இந்நிலையில் பிரியங்கா கர்ப்பிணி ஆனார். அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள நந்தகுமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்து, மிரட்டி உள்ளார். இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பிரியங்கா புகார் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நந்தகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!