மாவட்டம்

மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை திருச்சி கலெக்டர்..

திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக கல்வி பயிலும் உடலியக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

அதன்படி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ.1000-ம், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை ரூ.3000-ம், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ.4000-ம், இளங்கலை மற்றும் பட்டயப்படிப்பு படிப்பவர்களுக்கு ரூ.6000-ம், முதுகலை பட்டம் படிப்பவர்களுக்கு ரூ.7000-ம் என கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

தகுதியுள்ள கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மற்றும் மாணவியர்கள் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பத்துடன் கல்வி பயிலும் நிறுவனத்திடமிருந்து சான்றொப்பம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், கடந்த ஆண்டின் மதிப்பெண் சான்று நகல், வங்கி கணக்கு புத்தக நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறும் மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண் 0431- 2412590-ல் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அவர்கள் தெரிவித்துள்ளார்.

loading...
Back to top button
error: Content is protected !!