மாவட்டம்

காதலிக்கு கத்திகுத்து.. கழுத்தை அறுத்துக்கொண்ட திருச்சி காதலன்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் நமச்சிவாயநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகள் தேவி (21). மண்ணச்சநல்லூரில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் இவரை துறையூர் நாகலாபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் நவீன்(21) என்பவர் காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தேவிக்கு வேறு ஒரு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இதனை அறிந்த நவீன் தேவியைச் சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தேவி தனக்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதாகவும் இனிமேல் தன்னை பார்க்க வரவேண்டாம் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நவீன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தேவியின் கழுத்தில் குத்தி உள்ளார். அலறி துடித்து தேவி மயங்கி சரிந்துள்ளார். நவீன் அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை, சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!