மாவட்டம்

திமுக மா.செ தியாகராஜனுக்கு எதிராக திருச்சி மாநகர் அதிமுக ஆர்பாட்டம்..

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை.. பெண்களை இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சித்த திருச்சி தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனின் செயலை கண்டித்து அவர்மீது சட்டபூர்வ நடவடிக்கை வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 23ம் தேதி திருச்சி அண்ணாசிலை அருகில் காலை 10.00 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் முன்னாள் கழக சட்டமன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் முன்னாள் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் மாவட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட கழக பகுதி கழக வட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அனைவரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.

loading...
Back to top button
error: Content is protected !!