தமிழ்நாடு

தமிழக மின்வாரிய பணியிட மாற்றம் – ஜூலை 15க்குள் விண்ணப்பிக்க உத்தரவு!!

தமிழகத்தில் உள்ள மின்வாரியங்களில் பணியிட மாற்றம் செய்ய கோரி விண்ணப்பம் செலுத்துபவர்களுக்கு ஜூலை 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளது.

மின்வாரியங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியிடம் மாற்றி தரக்கோரி விண்ணப்பம் செலுத்துவதற்கு ஜூலை 15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக மின்வாரியத்தில் பணியிட மாற்றம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் படி செயல்முறைகள் தொடரும். ஏற்கனவே குறிப்பிட்டுள்ள படி, பணியிட மாற்றம் செய்வதற்கான கோரிக்கை குறிப்பிட்ட அரையாண்டுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

கடந்த ஜனவரி மாதம் இணையதளம் வழியாக அனுப்பப்பட்ட இந்த வகை கோரிக்கைகள் கடந்த 30.06.2021 க்கு மேல் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. அதன் படி ஜனவரி 2021 ல் அனுப்பப்பட்டு இதுவரை நிலுவையில் உள்ள கோரிக்கைகள் ரத்து செய்யப்படும். இதை தொடர்ந்து புதிய கோரிக்கைகள் ஜூலை 1 முதல் ஆன்லைன் வழியாக வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கான முக்கிய வழிகாட்டல்கள் http://192.168.150.75/openbd/RTAJUL21 என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர RTA கோரிக்கைகளின் நகல்களை அதற்குரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த போர்டல் ஜூலை 1 ஆம் தேதி காலை 10:30 மணி துவங்கி செயல்பட்டு வரும் நிலையில், ஜூலை 17, 2021 அன்று 5:15 மணியளவில் மூடப்படும். இந்த கோரிக்கைகளை ஆன்லைன் வழியாக அனுப்ப வேண்டியது கட்டாயம். எனவே கொடுக்கப்பட்ட 15 நாட்களுக்குள்ளாக மின்வாரிய பணியிட மாற்றத்துக்கான கோரிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: