தமிழ்நாடுமாவட்டம்

பைக் மோதி பரிதாபமாக 5 வயது சிறுவன் உயிரிழப்பு..

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கருக்கன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேலன். இவரது மகன் பிரகதீஷ்(5). இவர் தனியார் பள்ளி ஒன்றில் யு.கே.ஜி படித்து வந்தார். இதனிடையே, வேலன் கிருஷ்ணகிரி அடுத்த ஆலப்பட்டியில் உள்ள உறவினரின் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். கடைக்கு செல்வதற்காக பிரகதீஷ் ஆலப்பட்டி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் அதிவேகமாக வந்த டூவிலர் ஒன்று சிறுவன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரகதீஷை உறவினர்கள் மீட்டு, பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, டூவிலர் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button
error: Content is protected !!