இந்தியா

இந்திய பங்கு சந்தையில் உற்சாகத்துடன் தொடங்கிய வர்த்தகம்!

இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை புதிய உச்சத்துடன் தொடங்கின. சென்செக்‍ஸ், இதுவரை இல்லாத அளவாக 56 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 234 புள்ளிகள் உயர்ந்து வரலாறு காணாத அளவாக 56 ஆயிரத்து 26 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 59 புள்ளிகள் அதிகரித்து 16 ஆயிரத்து 673 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்‍க டாலருக்‍கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 74 ரூபாய் 30 காசாக இருந்தது.

இதையும் படிங்க:  இந்தியாவில் மீண்டும் உயரும் கொரோனா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: