இந்தியா

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. பரிதாபமாக 4 பேர் பலி..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே, சுற்றுலா பேருந்து ஒன்று 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் பரிதாபமாக 4 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுற்றுலாப் பேருந்து ஒன்று, விசாகப்பட்டினம் மாவட்டம் அனந்தகிரி கிராமத்திற்கு அருகேயுள்ள சாலையில் திரும்பும்போது, எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்‍குள்ளானது.

இந்நிலையில், விபத்தின்போது, இந்த பேருந்தில் 30 பயணிகள் இருந்துள்ளனர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்த சில பயணிகளை, ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்‍கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரின் நிலைமை ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Back to top button
error: Content is protected !!