தமிழ்நாடுமாவட்டம்

டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்துவது குறித்து நாளை முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2-ஏ, குரூப் 4 உள்ளிட்ட போட்டித்தேர்வுகள் மூலம் பல்வேறு அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

நடப்பு ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 வேளாண்மைத் துறை பணியிடங்களுக்கான தேர்வு, உதவி வரைவாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஆகியவை நடந்து உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக மற்ற தேர்வுகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளை எப்போது நடத்துவது என்பது தொடர்பாக, அரசுப் பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த ஆலோசனையைத் தொடர்ந்து, தேர்வுகளின் தேதி மற்றும் பணியிட விவரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:  நிலமற்ற ஏழைகளுக்கு இரண்டு மாதங்களுக்குள் நிலம் வழங்கும் திட்டம் - தமிழக அரசு அரசாணை வெளியீடு!

உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: