தமிழ்நாடு

நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை – வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம், முதல் வாரத்தில் நடத்தப்பட இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் நடத்தப்படவில்லை. அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக தேர்தல் நடத்தப்படாமல் விடுபட்ட மாவட்டங்கள், புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் உட்பட 9 மாவட்டங்களில் வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது.

இதன் கீழ் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க உள்ளது. இதில், வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பான பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடத்தப்பட உள்ளனர். அதனால் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு பயிற்சி அளிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் நாளை (செப்டம்பர் 24) ஒரு நாள் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் ஆசிரியர்கள் அனைவரும் சிறப்பு பயிற்சிகளில் கலந்து கொள்ள இருப்பதால் நாளை (செப்டம்பர் 24) ஒரு நாள் மட்டும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அரசு பிறப்பித்த முக்கிய உத்தரவு – பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து!!
Back to top button
error: