ஆன்மீகம்தமிழ்நாடு

இன்றைய ராசிபலன் (30.04.2021)

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் பலன்கள் உண்டாகும். தொழில் ரீதியான முன்னேற்றம் சுமாராக இருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த காரியம் நினைத்த நேரத்தில் நடைபெறும். தொழில் ரீதியான லாப வருமானம் கிடைப்பதில் பிரச்சினைகள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய முயற்சிகள் நல்ல பலன் தரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப காரிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும் யோகம் உண்டு. மன இருக்கும் கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்கள் திறம்பட சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். உங்களுடன் இருப்பவர்கள் உங்களை எதிரியாக பாவிக்க துவங்குவார்கள் என்பதால் கவனம் தேவை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதுர்யமான பேச்சு வார்த்தைகளால் நல்ல பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் தீரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர முயற்சி செய்வது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததற்கு போராட்டங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அமைதியுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கோபத்தை குறைத்துக் கொண்டால் நன்மையைப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு கட்டுப்பாட்டு அவசியம் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக தொகையை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: