ஆன்மீகம்தமிழ்நாடு

இன்றைய ராசிபலன் (29.04.2021)

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பங்கள் தீரும். தொழில் வியாபார விருத்தி அடையும். பெண்களுக்கு தைரியம் பிறக்கும். விநாயகரை வழிபட நல்லது நடக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் வியாபார விருத்தி சிறப்பாக இருக்கும். பெண்களுக்கு புத்துணர்ச்சியுடன் இருக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அம்பிகையை துதியுங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். தொழில் வியாபார விருத்தி மந்தநிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உற்சாகம் இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நீண்டநாள் நிலுவையில் இருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியிடங்களில் பயணம் செய்வதை தவிர்க்கவும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. இதுவரை நீங்கள் அனுபவித்து வந்த சில விஷயங்கள் நீங்கள் கைவிட்டு போகும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் வலுவாகும் என்பதால் எச்சரிக்கை தேவை.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நாட்டம் இருக்கும். புதிய புதிய விஷயங்களை தேடி பிடித்து முயற்சி செய்து பார்ப்பார்கள். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சுப செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிடைக்க புதிய உத்தியை கையாள்வது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையில்லாத பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய ராசிக்கு அற்புதமான பலன்களை பெறுவீர்கள். நீண்ட நாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய யோசனைகள் உண்டாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக அமையும் என்பதால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். இதுவரை உங்களுக்கு இருந்து வந்த கடன் தொகைகள் குறைவதற்கான சந்தர்ப்பங்களை கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவு திறக்கும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் அற்புதங்கள் நடக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மன சங்கடங்கள் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம். பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் குறையும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் சீராக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: