ஆன்மீகம்தமிழ்நாடு

இன்றைய ராசிபலன் (22.04.2021)

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் நிகழ்வுகள் சாதகமான பலன்களைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மாற்றங்களை செய்வீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையை அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமைதி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் சாதக பலன் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஜெயம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோக வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து அமைதி காப்பது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பல நாள் கனவு கல்வி பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்காலத்தைப் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் வந்து நினைத்தது ஒன்று நடக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் செழித்து ஓங்கும். கூடுமானவரை அனைவரிடத்திலும் விட்டுக்கொடுத்து செல்வது ஏற்றம் தரும் வகையில் அமையும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு சாதக பலன் கிட்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் இடையூறுகளை சந்திக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முடிவுகள் எடுக்க குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களுடைய ஒத்துழைப்பு கிடைப்பதில் பிரச்சினை ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நிறைவேறாத கனவுகளை நிறைவேற்றி காட்டுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் மந்த நிலையை மாற்ற முயற்சி செய்வீர்கள். உத்யோகத்தில் மன அமைதி இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்வதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு முடிவையும் யோசித்து செய்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் குறித்த விசயங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகளால் முன்னேற்றத்தை காணலாம்.

மகரம்

இதையும் படிங்க:  வாழ்நாள் முழுவதும் கண் திருஷ்டியிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு டம்ளர் தண்ணீரை வீட்டில் இப்படி வையுங்கள்.. பலநாள் கஷ்டங்களுக்கு கூட, ஒரே நாளில் தீர்வு..

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் எதிர்பார்க்கும் தனலாபம் உண்டு. பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற நிலை காரணமாக வீட்டுத் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய மாற்றங்களை சந்திப்பீர்கள். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. சுயதொழிலில் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை நிலவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் உற்சாகம் பிறக்கும். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய விஷயங்களை செய்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகள் தீரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: