ஆன்மீகம்தமிழ்நாடு

இன்றைய ராசிபலன் (21.02.2021)

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு செயலையும் தவிர்ப்பது நல்லது. ஒரு முடிவை எடுக்கும் முன் பல முறை சிந்தித்து அதன் பின் எடுப்பது நலமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் உங்களுக்கு காலதாமதமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அபாரமான நாளாக அமையும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பெண்களுக்கு நினைத்ததை நடத்தி காட்ட கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் வெற்றி ஆகும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அவன் மனைவி உறவுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய வெற்றிப் பாதையில் மற்றவர்கள் பயணிப்பதை நீங்கள் கவனிக்கத் தவறினால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவு புதிய புரிதலுடன் துவங்க இருக்கிறது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத நிகழ்வு ஒன்று நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனஅமைதி கிடைக்க கூடிய வகையில் வீட்டில் இருப்பவர்கள் நடந்து கொள்வார்கள். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் உண்டாகும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாளை முயற்சிகளில் இன்று பலன் கொடுக்கும் வாய்ப்புகள் உண்டு. இது வரை நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு என்றால் என்ன அதை எடுக்கும் எல்லா முயற்சியும் சாதகமான பலன்களைக் கொடுக்கும். சொத்துக்கள் வாங்கும் மற்றும் விற்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளாக இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு நீண்ட நாளாக உங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் கிடைக்கப் பெறும். சுயதொழில் கூட்டு பணி புரிபவர்கள் தான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற முனைப்பு மேலோங்கி காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்தநிலை காணப்படலாம். குடும்பத்தில் அமைதி நிலவ பொறுமையை கையாள்வது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் காலம் கடந்துதான் சில விஷயங்களை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். கண்களால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்பதை உணர்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் குடும்பத்துடன் செலவிடுகிறீர்கள். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் சிக்கல்கள் நீடிக்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சினைகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை திறம்பட சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சக பணியாளர்களின் ஒத்துழைப்பை பெறுவார்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும் அற்புதமான நாளாக இருக்கும். கவலைகள் நீங்கி புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளின் வழியே நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.

Back to top button
error: Content is protected !!