ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் (19.07.2021)

மேஷம்

உலகம் இன்று உங்களுக்கு சந்தோஷமயமாக இருக்கும். உங்களுக்கு அனைத்திலும் ஆர்வம் அதிகம் இருக்கும். உங்கள் விருப்பங்கள் ஒருதலைபட்சமானது என்பதை நீங்கள் மறந்துவிடுவீர்கள். உறவுகளில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், ஆராய்ந்து சிந்தித்து பிரச்னைகளை தீர்க்கவும்.

ரிஷபம்

நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் இன்று வெற்றி பெறும். நிதி பரிவர்த்தனைகள், லாபம் கொடுப்பதாகவும் திருப்திகரமான பலன்களை கொடுக்கும் வகையிலும் இருக்கும். இன்னும் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு அதிகளவிலான பலன்களை கொடுக்காது. இன்று முழுவதும் பணி செய்து சோர்வாக இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு ஒரு உற்சாகமான மாலை காத்துக் கொண்டிருக்கிறது.

மிதுனம்

உங்களது மனதுக்கு பிடித்தவர்களை மகிழ்ச்சியாக வைக்க நீங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். அவர்களும் அதே போன்று உங்களிடம் நடந்துகொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள். ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தாலும், மேலும் பல எதிர்பார்ப்புகள் உண்டாகும். நீங்கள் உங்களுக்கான நேரத்தை முறையாக செலவிட வேண்டும்.

கடகம்

நீங்கள், நேர்மறையான எண்ணம் கொண்டவராக இன்று திகழ்வீர்கள். உங்களது வெற்றி மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். மாலையில் நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நேரத்தை செலவிடுவீர்கள். குடும்பத்தினரது கோரிக்கைகளை நிறைவேற்ற திட்டமிட்டு செயல்படுவீர்கள்.

சிம்மம்

உங்கள் அலட்சியமான போக்கின் காரணமாக செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். நாளின் பிந்தைய பகுதியில், பணி தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம். அவற்றை அலட்சியம் செய்தால், பெரிய பிரச்னையாக உருவெடுக்கலாம். அவற்றை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும்.

கன்னி

மனதிற்குப் பிடித்த உறவுகளை தேடும் முயற்சி வெற்றி பெறும். பணியில் நீங்கள், மற்றவர்களைவிட திறம்பட பணி செய்து, சொல்லிலும் செயலிலும் சிறந்து விளங்குவீர்கள். நீங்கள் உங்களது வெற்றிக் கதைகளைக் கூறி, மக்களை மகிழ்ச்சியடையச் செய்வீர்கள். இதனால், அவர்கள் அன்பையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள்.

துலாம்

இன்று உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள பணியை நிறைவேற்ற, அனைத்து வகையிலும் முயற்சி செய்வீர்கள். உங்கள் அலுவலகத்தில் உள்ள உயர் அலுவலர்கள், உங்களது செயல் திறனைப் பார்த்து ஆச்சரியம் அடைவார்கள். இதன் மூலம் உங்களுக்கு பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

விருச்சிகம்

தலைமைக்கான அனைத்துப் பண்புகளும் உங்களிடம் உள்ளது. உங்களது திறமையை நிரூபிக்க இது சரியான வாய்ப்பாகும். உங்களது ஆளுமைப் பண்பை நீங்கள் நிரூபித்து, அனைத்து பிரச்னைகளையும் ஒரு சவாலாக எதிர்கொண்டு, அவற்றைத் தீர்த்து வைப்பீர்கள்.

தனுசு

பொதுவாக வார்த்தைகளைவிட செயல்கள் வலிமையானது என்று கூறுவார்கள். ஆனால் அது உங்கள் விஷயத்தில் சரியாக இருக்காது. உங்களது செயல்கள், உங்களது திறமைகளை எடுத்துக்கூற வேண்டும். உங்களது ஆளுமைப் பண்பை மேம்படுத்திக் கொள்ளவும் சுய மேம்பாட்டிற்காகவும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களது வீட்டை அலங்கரிக்க நீங்கள் முயற்சி எடுப்பீர்கள்.

மகரம்

சுய உதவியை செய்துகொள்ளும் மக்களுக்கு, கடவுள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் உடல் நலத்தையும் மனநலத்தையும் கவனித்துக்கொண்டு, உங்கள் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து பணியாற்றினால், கடவுள் உங்களுக்கு உதவி செய்வார். உங்கள் நிறுவனத்தின் சார்பாக, நீங்கள் முக்கியமான ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

கும்பம்

வேலை பளுவின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்படலாம். இருந்தாலும், உங்களது கடின உழைப்பிற்கு, விரைவில் சிறந்த வகையில் பலன் கிடைக்கும். உங்களது போட்டியிடும் திறன், உங்கள் உடன் பணிபுரிபவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். உங்களது உறுதியான அணுகுமுறை உங்களது மதிப்பை அதிகரிக்கும்.

மீனம்

நீங்கள் உங்கள் கடந்தகால செயல்திறன் பற்றி சிந்தித்து வருகிறீர்கள். இன்று நீங்கள் மேம்படுத்திக் கொள்ள முயற்சி செய்வீர்கள். உங்கள் நண்பர்கள் உங்களை மாற்ற நினைக்கலாம். உங்கள் திறமை மற்றும் ஆற்றல் காரணமாக, உங்களது முடிவுகளை நீங்களே எடுத்துக் கொள்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: