ஆன்மீகம்தமிழ்நாடு

இன்றைய ராசிபலன் (18.04.2021)

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி உறவில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி உண்டாக கூடுமானவரை கவனத்துடன் வேலை பார்ப்பது நல்லது. குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் ஜெயம் உண்டாகும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் அலைச்சல் இருந்தாலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளே உங்களுக்கு வெற்றியை தேடி தரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் மூலம் அற்புதமான பலன்களை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் புதிய முடிவுகளை எடுக்க சிறந்த நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேலும் அதிகரிக்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் மன அமைதி உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கூட்டாளிகளுடன் பகை உண்டாக வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச் சிதைவு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை செய்து விட்டு முடிவெடுப்பது நல்லது.

இதையும் படிங்க:  கழுத்தின் கருமையினைக் காணாமல் போகச் செய்யும் பேக்..!

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் மூலம் அதிக லாபத்தைக் காண்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டாகும். வாகன ரீதியான பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தினரின் ஆதரவு பெருகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன்இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை வலுவாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: