ஆன்மீகம்தமிழ்நாடு

இன்றைய ராசிபலன் (06.02.2021)

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அறிவுக்கும் திறமைக்கும் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்படும். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத வகையில் பணவரவு உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த விஷயங்கள் நினைத்தபடியே நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தனலாபம் பெருகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி புதிய உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் நீங்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது.

கடகம்

கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சற்றும் எதிர்பாராத திருப்பங்கள் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. நடக்கவே நடக்காது என்று நினைத்துக் கொண்டிருந்த காரியங்கள் கூட சாத்தியமாகும். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை காணும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய உத்திகளை கற்றுத் தேர்வதற்கு வாய்ப்புகள் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொலைதூரத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓங்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்க ஒருவரை ஒருவர் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. சரியான நேரத்தில் பணம் கிடைக்க தாமதமாகலாம். சுய தொழிலில் அதிக லாபம் காணலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலவீனம் அறிந்து நீங்களே ஆச்சரியப்படக்கூடிய நாளாக அமையும். உங்களிடம் இருக்கும் குறைகளை நீக்கிக் கொண்டு முன்னேற்ற பாதையை நோக்கி செல்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு சீரான முன்னேற்றம் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுயதொழிலில் இருப்பவர்களுக்கு கூடுதலான உழைப்பு அவசியமாகும். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை படிப்படியாக எதிர்கொள்வீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் என்னதான் முயற்சி செய்தாலும் உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க தாமதமாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரக்தி மனப்பான்மை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறும். வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கையுடன் இருந்து கொள்வது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மன ரீதியான குழப்பங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சரியான முடிவைத் தேர்ந்தெடுப்பதில் ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்தித்துச் செயலாற்றுவது நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத பணவரவு மன மகிழ்ச்சி உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் உள்ளவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். தேவையில்லாத வீண் பழிகளைச் அமைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். திருமண சுப காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் எச்சரிக்கை தேவை.

Back to top button
error: Content is protected !!