ஆன்மீகம்தமிழ்நாடு

இன்றைய ராசிபலன் (05.05.2021)

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சுமாரான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பெண்கள் தைரியத்துடன் செயல்படுவார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற வாகன ரீதியான பயணங்களை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வெளியிடங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான அமைப்பு என்பதால் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் மேலும் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுமானவரை பண விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற புதிய உத்திகளை கையாள்வது உத்தமம். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக்கும் என்பதால் கூடுமானவரை விட்டு கொடுத்து செல்வது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் அதிர்ஷ்ட யோகம் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. பூர்விக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். உத்யோகத்தில் நிலையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் பலவீனத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு அதிகரித்து காணப்படுவதால் டென்ஷனுடன் இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தின் மீதான மேலோங்கி காணப்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முடிவு வரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி நல்வழி பிறக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தினரிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடை ப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கூடுமான வரை வெளியில் செல்வதை தவிர்ப்பது உத்தமம். தேவையற்ற நண்பர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய விஷயங்களை செய்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் இருப்பது நல்லது.

இதையும் படிங்க:  இன்றைய (ஏப்ரல் 30) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தை பற்றிய விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தோல்வி ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் குறைந்து காணப்படும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் உபாதைகள் ஏற்படும் என்பதால் ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை மேலும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: