ஆன்மீகம்தமிழ்நாடு

இன்றைய ராசிபலன் (04.04.2021)

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தொடர்ந்து மந்த நிலை நீடிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை பெறுவதற்கான யோகம் உண்டு. கணவன்-மனைவி பிரச்சனைகள் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாள் நண்பர் ஒருவரை சந்திக்க கூடிய வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சாதிக்கும் தைரியம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் வகையில் பணவரவு சீராக அமையும். குலதெய்வ அருள் கிடைக்க உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய நீண்ட நாள் பிரச்சனைகள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. திடீர் பணவரவு எதிர்பாராத மகிழ்ச்சியை உண்டாக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிறைவு காண பணியில் கவனம் செலுத்துவது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத வகையில் இடையூறுகள் ஏற்படலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்க கூடிய வகையில் அமையும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் தடைகள் யாவும் விலகும். உத்தியோகத்தில் வேலைபளு இருக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் உண்டாகக் கூடிய அற்புதமான நாளாக இருக்கிறது. சுபகாரிய முயற்சிகள் கைக்கூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சூடுபிடிக்க துவங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் என்று சக நண்பர்களின் ஆதரவு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக்கூடாது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான முடிவை எடுக்கக் கூடிய அற்புதமான நாளாக அமையும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாக கூடிய வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பகை தொல்லைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு உரிய இறைவழிபாடு செய்து கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம். வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் இருக்க ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கான தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் தனவரவு எதிர்பாராத வகையில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வீண் விரயத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிறைவு இருக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றால் ஜாதக பலன்கள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடலில் சோர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படுவதால் டென்ஷன் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் கடன் தொல்லைகள் நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான முன்னேற்றம் உண்டு.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்த பெறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் உயரும். சுய தொழில்கள் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: