தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்றைய (பிப்., 4) கொரோனா பாதிப்பு நிலவரம்..

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழகத்தில் இன்று 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 40 ஆயிரத்து 360 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் 149 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!