தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்றைய (பிப்., 2) கொரோனா பாதிப்பு நிலவரம்..

தமிழகத்தில் இன்று புதிதாக 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 39 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 517 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று 521 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 22 ஆயிரத்து 468 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 367 ஆக அதிகரித்துள்ளது.

Back to top button
error: Content is protected !!