தமிழ்நாடுமாவட்டம்

தமிழகத்தில் இன்றைய (பிப்.,14) கொரோனா பாதிப்பு நிலவரம்..

தமிழகத்தில் இன்று மேலும் 470 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 8,45,120 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 6 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 3 பேர், தனியார் மருத்துவமனையில் 3 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,419 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 479 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,28,441 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு 4,260 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,33,334 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 4,123 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 1,67,62,668 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 53,483 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,64,48,958 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 53,323 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!