காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தில் (TNMSCL) காலியாக உள்ள Accounts Officer மற்றும் Assistant Accounts Officer பணிக்கு என தலா 01 இடம் விதம் மொத்தமாக 02 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
- Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Commerce பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree-யை முடித்தவராகவும், Chartered Accountants of India -வில் Member ஆக இருப்பவராகவும் இருக்க வேண்டும்.
- Assistant Accounts Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Commerce பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Bachelor’s , Master Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
அனுபவம்:
Accounts Officer, Assistant Accounts Officer பணிகளுக்கு அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் Accounts துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 40 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
- Accounts Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் Level 22 படி குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
- Assistant Accounts Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்கள் Level 20 படி குறைந்தபட்சம் ரூ.37,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,19,500/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
தேர்வு முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது பதிவை செய்து கொள்ளலாம். பின் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலுடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 09.05.2022 என்ற இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு விரைவு தபால் செய்ய வேண்டும்.
தபால் முகவரி:
The Managing Director,
Tamil Nadu Medical Services Corporation Limited,
No.417, Pantheon Road, Egmore,
Chennai-8.
உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh