தமிழ்நாடு

இன்று ஆசிரியர் தினம் (செப்டம்பர் 5)

ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் நமது பாரத இந்தியா, முன்னாள் பாரதக் குடிமகன் சர்வபள்ளி டாக்டர். இராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 05-ஆம் இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகிறது.

சுதந்திரத்திற்குப் பின், 1948-ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு, பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் பலரும் கேட்டுக்கொண்டனர். அவ்வாறே அவரும் பொறுப்பேற்றார். அந்த காலகட்டத்தில் இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்தார். சிறப்பான கல்வித் திட்டத்தையும் வடிவமைத்தார். இதனால், அவரது பிறந்த நாளை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டுமென அவரது மாணவர்கள் பலரும் அனுமதி கேட்டனர். அதற்கு அவர், தனது பிறந்த நாளை தனியாக கொண்டாடுவதை விட அதை ஆசிரியர் தினமாக கொண்டாடினால் தனக்கு பெருமை எனக் கூறினார். ஆசிரியர் தொழிலில் தனக்கு இருந்த ஈடுபாடு காரணமாக அவர் இவ்வாறு கூறினார். அவர் விரும்பியவாறே ஆண்டுதோறும் அவர் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  பள்ளிகள் திறப்பு குறித்து மறுபரிசீலனை – முன்னாள் அமைச்சர் கோரிக்கை!!!
Back to top button
error: