பொழுதுபோக்கு

இன்று நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்ட தினம் (செப்டம்பர் 23)

பென்சில் முனையில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகம் நெப்டியூன். வில்லியம் ஹெர்ச்செல் என்ற விஞ்ஞானி, 1781-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் நாள் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார். யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்பு சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும். அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருப்பதாலே… அதன் ஈர்ப்பு சக்தியின் காரணமாக யுரேனஸில் தள்ளாட்டம் ஏற்படுகிறது என வானவியலாளர்கள் கணித்தனர். அதைக் கண்டுபிடிப்பது எப்படி என சிந்தனை செய்யத் தொடங்கினர். பிரெஞ்சு நாட்டவரான லெவெரியா மற்றும் இங்கிலாந்து நாட்டை சார்ந்த ஆடம்ஸ். இந்த இரண்டு இளைஞர்களும் வானவியலில் புதுமைப் புரட்சி செய்தனர். இரவு வானை சல்லடை போட்டு தொலைநோக்கி கொண்டு தேடியபோது, தற்செயலாக நெப்டியூன் கோளும் கண்டுபிடிக்கப்பட்டது.

1846-ஆம் ஆண்டு, ஆடம்ஸ் தனது கணக்கீட்டைச் செய்து முடித்தார். அவரது நாட்டின் தலை சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது கணக்கை எடுத்துச் சென்றார். இளைஞரான ஆடம்ஸ் கூற்று சரியாக இருக்காது என நினைத்த எய்ரி, இதை பொருட்படுத்த வில்லை. அந்த ஆய்வு முடிவுகளை லெவெரியா ஜெர்மனியில் உள்ள பெர்லின் தொலைநோக்கிக் கூடத்துக்கு அனுப்பினார்.அதன் இயக்குனரும் ஆர்வம் காட்டவில்லை. பிறகு, அங்கே பணியாற்றிய ஜான்கால், ஹைன்ரிடீ தஜேஸ்ட் எனும் ஆய்வாளர்களின் வேண்டுகோளுக்கு செவி கொடுத்த இயக்குனர், நெப்டியூன் கோளினை லெவெரியா கணித்த இடத்தில் தேட, ஒரு சில நாட்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி வழங்கினார். 1846-ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள், சரியாக இரவு 12 மணிக்கு லெவெரியா கணக்கிட்டு சொன்ன இடத்தில் நெப்டியூன் தென்பட்டது. அடுத்த சில நாட்கள் அதன் இயக்கத்தைச் சரிபார்த்து, இது கோள்தான் என உறுதி செய்தனர். இவ்வாறு கணிதம் கொண்டு பென்சில் முனையில் நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டது.

நெப்டியூன் விட்டத்தின் அடிப்படையில் சூரிய குடும்பத்தின் நான்காவது மிகப் பெரிய கோளாகவும் அடர்த்தியின் அடிப்படையில் மூன்றாவது பெரிய கோளாகவும் விளங்குகின்றது. நெப்டியூன் சூரியனிடமிருந்து 8 ஆவது இடத்தில் 4 498 252 900 Km அல்லது 30.07 AU தொலைவில் அமைந்துள்ளது. நெப்டியூன் பூமியை விட பருமனில் 4 மடங்கும் திணிவில் 17 மடங்கும் உடையது. இது ஒரு நீல நிறக்கோளாகும். நெப்டியூன் என்பது ரோமானியர்களின் கடல் கடவுளின் பெயர் ஆகும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  அட்டகாசமான சுவையில் மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் செய்முறை!
Back to top button
error: