தமிழ்நாடு

ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று ஜெயலலிதாவுடன் செல்பி எடுக்கலாம்..!

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் பீனிக்ஸ் பறவை மற்றும் இரண்டு பக்கத்தில் 21 மீட்டர் உயரத்தில் இறக்கை வடிவமைப்பு, அறிவுசார் பூங்கா, அருங்காட்சியகம் உள்ளிட்டவை கட்டப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தை ஜனவரி 27ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்தில் அறிவுசார் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அவரது வாழ்க்கை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அறிவுசார் பூங்காவில் ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தொடர்பாக 8 டிஜிட்டல் வீடியோ காட்சிகளை காணலாம். 50 பேர் அமரும் வசதியுடன் கூடிய ஆடிட்டோரியம் அமைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சிலிக்கான் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. தத்தரூபமாக வடிவமைக்கப்பட்ட ஜெயலலிதாவுடன் செல்பி எடுக்கலாம். இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா பிறந்தநாளான இன்று காலை 10.30 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து, இன்று (பிப்.,24) முதல் மீண்டும் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறது.

Back to top button
error: Content is protected !!