தமிழ்நாடு

மாநில வளர்ச்சி குழுவிற்கு – முதலமைச்சர் அறிவுறுத்தல்!!

தமிழகத்தில் வளர்ச்சிக்காக 7 இலக்குகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை முன்னிலைப்படுத்தி வளர்ச்சி கொள்கைகளை தயார் செய்ய மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவிற்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழு 1971 ஆம் ஆண்டு கருணாநிதி அவர்களால் அமைக்கபட்டது. இந்த குழு முதல்வரின் தலைமையின் கீழ் ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை வழங்கி வருகிறது. மேலும் இக்குழுவானது 2020 ம் ஆண்டு மாநில வளர்ச்சி கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள முக ஸ்டாலின் அவர்கள் மாநில வளர்ச்சி கொள்கை குழுவை திருத்தியமைக்க உத்தரவிட்டார். அதன்படி, கடந்த மாதம் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் பேராசிரியர் ராம.சீனுவாசன் முழு நேர உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

இக்குழுவில் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தனித்தனி துறைகள் ஒதுக்கப்பட்டு கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இக்குழுவின் தலைவருக்கு விவசாய பணி மற்றும் திட்டமிடல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற உறுப்பினர்களுக்கு கல்வி சுகாதாரம் போன்ற பணிகள் வழங்கப்பட்டுள்ளது. மக்களிடம் கேட்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட வரைவு திட்டம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் வளர்ச்சிக்காக 7 இலக்குகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்குகளை முன்னிலைப்படுத்தி வளர்ச்சி கொள்கைகளை தயார் செய்ய மாநில வளர்ச்சி கொள்கைக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

மாநில வளர்ச்சிக் குழுவின் 7 இலக்குகள்:

  • வளரும் வாய்ப்புகள்
  • மகசூல் பெருக்கம்
  • குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்
  • உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்
  • எழில்மிகு மாநகரம்
  • உயர்தர ஊரகக் கட்டமைப்பு
  • அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: