தமிழ்நாடு

அரசு மாவட்ட வன அலுவலர்கள் கவனத்திற்கு – அமைச்சர் அறிவுறுத்தல்!!

தமிழகத்தின் வன பரப்பு 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசின் பிற துறை ஊழியர்களுடன் இணைந்து அரசின் காலியான இடங்களில் மரம் நட வேண்டும் என அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தமிழகத்தினை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான காலியாக உள்ள பகுதிகளில் தமிழா அரசின் பிற துறையினருடன் இணைந்து மரக்கன்று நடும் பணியை மாவட்ட வன அலுவலர்கள் முன் எடுக்க வேண்டும் என்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். தமிழகத்தின் வன பரப்பு 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அது குறித்த ஆய்வு கூட்டமானது வியாழன் அன்று நடைபெற்றது. இதற்கு ராமச்சந்திரன் தலைமை வகித்தது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் வன பரப்பு 33 சதவீதமாக உத்தரவு பிறப்பித்து தொடர்ந்து மாவட்ட வன அலுவலர்கள் தங்களது பகுதிகளில் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு அதை பராமரிக்க வேண்டும் வேண்டும். ஏற்கனவே உள்ள மரங்களை பராமரிப்பது குறித்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அரசின் பிற துறையினருடன் இணைந்து வன அலுவலர்கள் காலியாக இருக்கும் அரசுக்கு சொந்தமான இடங்களில் மரங்கள் நடும் பணியை மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக பொதுப்பணித்துறை, அறநிலையத்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்களை இணைத்து மரக்கன்று நட வேண்டும் எனவும் கூறினார். வன விலங்குகளை பாதுகாப்பது மற்றும் மனித-விலங்கு எதிர்கொள்ளலை தடுப்பது குறித்து வன அலுவலர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:  9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – இன்று வெளியாகும் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: