ஆரோக்கியம்

நீரிழிவு (சர்க்கரை) நோயாளிகள் பாதங்களை பராமரிக்க..

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் போனால், பாதத்தில் உணர்ச்சிகள் குறைந்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைந்துவிடும். நரம்புகள் பாதிப்படையும். காலில் புண் ஏற்படும்போது முதலில் பாதிப்படைவது கால் நரம்புகளே. கால் ஆணி, பாத வெடிப்பு, தடிப்புகள் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். குறிப்பாக இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் தினமும் கால்களைப் பராமரிக்க வேண்டும்.

பராமரிக்கும் வழிகள்

சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு உட்கொள்ள வேண்டும்.

தினமும் உறங்கச் செல்வதற்குமுன் சூடான நீரைக் கொண்டு கால்களைக் கழுவ வேண்டும். காலில் உணர்ச்சி இருக்கிறதா, என்பதை தினமும் உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

கால் கழுவும்போது, காலில் புண், காயங்கள், சிராய்ப்புகள் காணப்படுகிறதா, தடித்திருக்கிறதா, என்பதை கவனிக்க வேண்டும்.

கால் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வறண்டு போகும்பட்சத்தில், மருத்துவர் ஆலோசனையுடன் லோஷன், க்ரீம் பயன்படுத்துவது நல்லது.

கால் விரலின் நகங்களை தினமும் சுத்தப்படுத்த வேண்டும். நகம் வளராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். நகம் வெட்டும்போது, மிகவும் கவனமாக வெட்ட வேண்டும். சதையை வெட்டிவிட்டால், அது புண்ணாகி பிரச்சனை ஏற்படுத்தும்.

கால் நகங்களைப் பாதுகாக்க, லெதரால் செய்யப்பட்ட ஷூ-ஷாக்ஸ் போன்ற காலணிகளை அணிவது நல்லது. காலின் அளவிற்குப் பொருத்தமான காலணிகளைத் தேர்வுசெய்ய வேண்டும்.

காலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். உட்காரும்போது கால்களை நீட்டி உட்கார்வது, காலுக்கான தனிப்பயிற்சிகள் செய்வது அவசியம்.

காலில் சிறு மாற்றம் தெரிந்தாலும், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க:  சுண்டைக்காயில் கிடைக்கும் ஆரோக்கிய ரகசியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: