தமிழ்நாடு

தமிழகத்தில் ஜூலை 26 முதல் TNUSRB இரண்டாம் நிலை காவலர் உடற்தகுதித்தேர்வு!!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட இரண்டாம் நிலை காவலர் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 26 முதல் 40 மையங்களில் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். 11,741 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வுக்கான முடிவுகள் கடந்த பிப்ரவரி 19ம் தேதி வெளியிடப்பட்டன.

அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு கடந்த மார்ச் 8 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூலை 26 முதல் இரண்டாம் கட்ட தேர்வு நடக்க உள்ளதாக சீருடை பணியாளர் தலைவர் சீமா அகர்வால் அறிவித்துள்ளார்.

மேலும் இரண்டாம் கட்ட தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் இந்த உடற்தகுதி தேர்வும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளலாம். அதற்காக தமிழகம் முழுவதும் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 40 மையங்களை தயாராக வைத்திருக்கும்படி கமிஷனர்கள், எஸ்.பி.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பல மாதங்களாக இந்த தேர்வு நடத்தப்படாமல் தற்போது நடத்தப்படுவதால் தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: