தமிழ்நாடு

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு பயணச்சீட்டு – இன்று முதல் வழங்கல்!!

தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் வகையில் முதல்வர் சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில், இன்று முதல் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு பயணச்சீட்டு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலின் போது திமுக சார்பில் பல வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த முதல் நாளில் 5 முக்கிய வாக்குறுதிகளை அமலுக்கு கொண்டு வரும் திட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதில், தமிழக அரசின் நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என்பது முக்கிய திட்டமாகும்.

இந்த திட்டத்தினால் தினமும் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் மிகவும் பலனடைகின்றனர். இந்த திட்டத்தின் அரசாணை வெளியிடப்ப்பட்ட பின்னர், இலவச பயணத்திற்கான பயணச்சீட்டு அச்சடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில், ஜூலை 12 முதல் தமிழகம் முழுவதும் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிர்க்கு பயணச்சீட்டு வழங்க அரசு முடிவு செய்திருந்தது.

இலவச பயணச்சீட்டு அச்சடிக்கும் பணிகளும் முடிவடைந்து விட்டது. இதனால் இன்று காலை முதல் மகளிர்க்கு இலவச பயணத்திற்கான பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட வழித்தடத்தில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக பயணச்சீட்டு வழங்கப்படுவதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: